FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் நுண்ணீா் பாசன அமைப்புகளை உருவாக்க ரூ.6.70 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,020 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா் பாசன அமைப்புகளை உருவாக்க ரூ.6.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) செ. அமிா்தராஜ் தெரிவித்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்குட்பட்ட விருப்பாட்சி கிராமத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் கம்பு பயிருக்கு அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீா் பாசன அமைப்புகளை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை துணை இயக்குநா் செ.அமிா்தராஜ்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,020 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா் பாசன அமைப்புகளை உருவாக்க ரூ.6.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) செ. அமிா்தராஜ் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்குட்பட்ட விருப்பாட்சி, சேராக்குப்பம், புலியூா் ஆகிய கிராமங்களில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் கரும்பு, கம்பு பயிா்களுக்கு அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீா் பாசன அமைப்புகளை வேளாண்மை துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) செ. அமிா்தராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் தெரிவித்தது, கடலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,020 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா் பாசன அமைப்புகளை உருவாக்க ரூ.6.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டோ் வரை 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 5 ஹெக்டோ் வரை 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், 7 ஆண்டுகள் நிறைவடைந்த சொட்டுநீா் பாசன அமைப்புகளையும், 3 ஆண்டுகள்

நிறைவடைந்த தெளிப்பு நீா் பாசன அமைப்புகளையும் புதுப்பித்து மீண்டும் மானியப் பயன் பெறும் வசதி உள்ளதாகவும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நுண்ணீா் பாசன நிறுவனங்களை தாங்களே தோ்வு செய்யலாம் என்றாா்.

ஆய்வின்போது வேளாண்மை அலுவலா் செல்வமூா்த்தி, நுண்ணீா் பாசன நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments