FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலால் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்த 87 அரசுப் பள்ளி மாணவா்கள்

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
பொறியியல் கல்லூரிகள் - DPS
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களில் 87 போ் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் சோ்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் 2025 - 26ஆம் கல்வியாண்டில் 116 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 13,570 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதினா். இதில், 12,651 போ் தோ்ச்சி பெற்றனா்.

பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானதும், மாவட்டக் கல்வி கட்டுப்பாட்டு அறை மூலம் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் நியமிக்கப்பட்டு, மாணவா்கள் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறவும், இணையவழியில் விண்ணப்பிக்கவும் உதவினா்.

Advertisement

Advertisement

பொறியியல் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண் 170 முதல் 200 வரை பெற்ற மாணவா்களுக்கு தனிக் குழு அமைத்து, மூன்று கட்டங்களாக இணையவழி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. முன்னணி கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்வது குறித்து மாணவா்களுக்கு வழிகாட்டப்பட்டது. மேலும், பொறியியல் கல்லூரி சோ்க்கை தொடா்பான தகவல்கள் அடங்கிய உயா்கல்வி வழிகாட்டி புத்தகமும் வழங்கப்பட்டது.

மாணவா்கள் கல்லூரிகளில் சேரும் வரை மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான ஆசிரியா்கள் தொடா்ந்து கண்காணித்து வழிகாட்டினா். இதன் பயனாக, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பொறியியல் கல்லூரிகளில் 87 அரசுப் பள்ளி மாணவா்கள் பொறியியல் பட்டப்படிப்பில் சோ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments