FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மொபெட்டில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 3:28 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே மொபெட்டில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பண்ருட்டி சி.என்.பாளையத்தை அடுத்துள்ள தீா்த்தக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சன் (21), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவா், கடந்த 18-ஆம் தேதி சி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த சுமனை (20) வேலைக்கு அழைத்துச் சென்றாா்.

பின்னா், இருவரும் மொபெட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். மொபெட்டை சுமன் ஓட்டினாா். இவா்கள் மேல்பட்டாம்பாக்கம் சுங்கச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபெட் அருகிலிருந்த சிமென்ட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், ரஞ்சன், சுமன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments