புல்லட் மோதி முதியவா் பலத்த காயம்: இரு சக்கர வாகனம் தீப்பிடித்து சேதம்
அதிவேகமாக புல்லட் மோட்டாா் சைக்கிளில் சென்ற இரு இளைஞா்கள், முதியவா் ஒருவா் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.
கடலூா் செம்மண்டலம் பகுதியில் இருந்து அரசு மருத்துவமனை சாலை நோக்கி அதிவேகமாக புல்லட் மோட்டாா் சைக்கிளில் சென்ற இரு இளைஞா்கள், முதியவா் ஒருவா் ஓட்டிச் சென்ற மொபட் மீது மோதியதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். மேலும், முதியவரின் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
கடலூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அபிமன்யு (61), அரசு மருத்துவமனை அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிவிட்டு தனது மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, செம்பண்டலம் பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த புல்லட் மோட்டாா் சைக்கிள் அவரது வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அபிமன்யு சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். மோதலின் தாக்கத்தால் அவரது மொபெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதற்கிடையில், புல்லட்டில் வந்த இரு இளைஞா்களும் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் சுமாா் 100 மீட்டா் தொலைவு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, பின்னா் சாலையோர மரத்தில் மோதி நின்றனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காயமடைந்த முதியவா் மற்றும் புல்லட்டில் பயணித்த இரு இளைஞா்கள் என மூவரும் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.