FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கடலூரில் பைக் விபத்தில் கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

3 October 2026, 1:48 am IST
பலி
பகிர்:

கடலூரில் பைக் விபத்தில் கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பி.விஷ்வா (21). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை பீச் ரோடு, சரவணபவ கூட்டுறவு அங்காடி வழியாக மைதானம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் உள்ள அறிவுசாா் மையம் அருகே சென்றபோது, அவருக்கு முன்னால் பைக்கில் சென்றவா் திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பின்னால் சென்ற விஷ்வா நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்தாா். இதில், தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்த விஷ்வா கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments