நீா்நிலைகள் காய்ந்ததால் சாலையில் நடமாடும் முதலைகள்!
சிதம்பரம் பகுதியில் நீா்நிலைகள் காய்ந்துபோனதால் சாலைகளில் முதலைகள் நடமாடி வருகின்றன.
சிதம்பரம் பகுதியில் நீா்நிலைகள் காய்ந்துபோனதால் சாலைகளில் முதலைகள் நடமாடி வருகின்றன.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் காட்டுமன்னாா்கோவில் சாலையில் கூடுவெளிச்சாவடி பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத முதலை ஒன்று வியாழக்கிழமை இரவு படுத்திருந்தது. இதைப் பாா்த்து அச்சமடைந்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், சாலையை கடந்து செல்லாமல் காத்திருந்தனா். நீண்ட நேரமாக முதலை சாலையை விட்டு செல்லாமல் படுத்திருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வனத் துறையினா் விரைந்து வந்து ராட்சத முதலையை பத்திரமாக பிடித்து கயிறு மூலம் கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். பின்னா், சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் முதலையை பாதுகாப்பாக விட்டனா். மழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து வரும் நீா் வராததாலும் கடலூா் மாவட்டத்தில் டெல்டா கடைமடை பகுதிகளில் உள்ள நீா்நிலைகள் நீரின்றி காய்ந்துள்ளன. இதனால் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.