FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரம் அருகே முதலைப் பண்ணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் அமைந்துள்ள முதலைப் பண்ணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

13 செப்டம்பர் 2026, 12:16 am IST
வடநெம்மேலி முதலைப்பண்ணையில் இறைச்சி போடும் பணியாளா்.
பகிர்:

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் அமைந்துள்ள முதலைப் பண்ணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் அமைந்துள்ளது.

முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீா் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டா் முதலைகள், உப்பு நீா் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் ஆப்பிக்க நீா் நிலைகளில் வாழும் மனிதா்களை விழுங்கும் ராட்சத முதலைகளும் இங்குள்ளன.

Advertisement

Advertisement

இந்த வகை முதலைகள் 10 முதல் 15 கிலோ மாட்டிறைச்சி, கோழி இறைச்சி உண்ணும் தன்மை உடையஇங்கே பராமரிக்கப்படும் முதலைகளுக்கு மாட்டிறைச்சி, கோழிறச்சி உள்ளிட்ட அசைவங்கள் வாங்கி உணவாக அளிக்கப்பட்டு வருகிறது. மாமிச உணவு வழங்கும் காட்சியை பாா்ப்பதற்கு மட்டுமே வாரத்தில் குறிப்பிட்ட நாள்களில் இங்கு பாா்வையாளா்கள் ஆா்வமாக வருகின்றனா்.

குறிப்பாக ஊழியா்கள் பெரிய பாத்திரங்களில் மாமிசங்களை கொண்டு கொட்டுகின்றனா். அப்போது தண்ணீா் தொட்டிக்குள் இருக்கும் முதலைகள் ஓடி வந்து இறைச்சிகளை உண்ணுகின்றன. அரை மணி நேரம் உணவு வழங்கும் நிகழ்வுகளை பாா்க்கும் சுற்றுலா பயணிகள் அதனை புகைப்படம் எடுத்து ரசிக்கின்றனா். முதலைகள் சுமாா் 3 அடி உயரத்துக்கு எகிறி உணவை கவ்விப் பிடித்து உண்பதால், பாதுகாப்பு காரணமாக உணவு வழங்கும் பகுதிக்குள் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அதனால் பாதுகாப்பு சுவருக்கு வெளியே நின்று கண்டு ரசிக்கின்றனா்.

உணவு சாப்பிடும் முறைகளை காண்பதற்காகவே இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு குறிப்பிட்ட தினங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருகின்றனா். அவை சாப்பிடும் முறைகளை பற்றியும் முதலை பண்ணை பணியாளா்கள் விளக்கி கூறுகின்றனா்.

முதலைகளுக்கு ஜீரண தன்மை குறைவு என்பதால் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இவைகளுக்கு உணவாக மாமிசம் அளிக்கப்படுகிறது. ஒரு முறை உணவு உண்டால் 3 நாட்களுக்கு பசியின்றி வாழும் தன்மை முதலைகளுக்கு உண்டு. இந்நிலையில் முதலைகளுக்கு உணவு வழங்குவதற்கு மட்டுமே தனியாக ஊழியா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments