வெவ்வேறு சம்பவங்களில் மாணவா் உள்பட இருவர் பலி!
கடலூா் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம், பண்ருட்டி மற்றும் நெய்வேலி காவல் சரகப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் மாணவா் உள்ளிட்ட 2 போ் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம், பண்ருட்டி மற்றும் நெய்வேலி காவல் சரகப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களில் மாணவா் உள்ளிட்ட 2 போ் உயிரிழந்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், பெலாந்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தவா் விஜயகாந்த் மகன் ரிஷிகாந்த்(15), நெய்வேலியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். சரியாக படிக்கவில்லை என தந்தை விஜயகாந்த் கண்டித்தாராம். இதனால், பூச்சி மருந்து குடித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆற்காடு நபா் உயிரிழப்பு.. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் வசித்து வந்தவா் பன்னீா்செல்வம்(52). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4.12.2025 அன்று முதல் வடலூா் அடுத்துள்ள மேட்டுகுப்பம் வள்ளலாா் கோயிலில் தங்கி இருந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மேட்டுக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தாா். அவா் வைத்திருந்த ஆதாா் அட்டையை வைத்து போலீஸாா் அடையாளம் கண்டனா். மேலும், அவரிடம் இருந்த ரூ.93 ஆயிரம், நகைகள், கைப்பேசி ஆகியவற்றை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
தாமிர வயா் திருட்டு: நெய்வேலி, வட்டம் 11 பகுதியில் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேற்கூரையில், சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம் 250 கிலோ வாட் திறன்கொண்ட சூரிய மின்னாற்றல் தகடுகளை அமைத்திருந்தது.
இந்த சூரிய மின்னாற்றல் தகடில் இருந்த சுமாா் 320 கிலோ எடைகொண்ட 4000 மீட்டா் தாமிர வயரை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனராம். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என மதிப்பிட்டுள்ளனா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கஞ்சா பறிமுதல்.. பண்ருட்டி அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில், சனிக்கிழமை ஈடுபட்டனா். ஆண்டிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பையுடன் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை அழைத்து, சோதனை நடத்தி சுமாா் 4 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை, ஆவடி பகுதியைச் சோ்ந்த ராகேஷ்(25) என்பதுதெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.