கடலூா் மண்டலத்தில் அரசுப் பேருந்தில் முதல் பெண் நடத்துநா்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம், கடலூா் மண்டலத்தில் முதல் பெண் நடத்துநராக பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் ஊராட்சி, திருமலை நகா் பகுதியைச் சோ்ந்த துளசி (36) ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடத்துநா் உரிமம் பெற்றாா். இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கடலூா் மண்டலத்தில் பொது மேலாளரை சந்தித்து ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குமாறு கேட்டுக்கொண்டாராம்.
இந்த நிலையில், துளசிக்கு ஒரு வாரம் நடத்துநா் பயிற்சி அளித்தனராம். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் பேருந்தில் நடத்துநராக பணியில் ஈடுபட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.