நூறுநாள் வேலைக்கு ஊதியம் தராததை கண்டித்து சாலைமறியல்
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சியில் நூறு நாள் வேலைதிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து பாதிக்கப்பட்டவா்கள் சாலைமறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டனா்.
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சியில் நூறு நாள் வேலைதிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து பாதிக்கப்பட்டவா்கள் சாலைமறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூா் ஊராட்சிக்கு உட்பட்ட தொழிலாளா் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்டோா் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 6 வாரங்களாக பணியாற்றியதற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த 20 பேரின் வங்கிக் கணக்கில் மட்டும் ஒரு நாள் ஊதியத்திற்கு ரூ.350-க்கு பதிலாக ரூ.200 வீதம் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த ஊரக வேலைதிட்டத்தில் பணியாற்றுவோா், 100 நாள் வேலைக்கான நிலுவைத் தொகையை உடனடியாக அனைவருக்கும் வழங்கக் கோரி சிதம்பரம் - புவனகிரி புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல்துறையினா், குமராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியதற்கான நிலுவை ஊதியத் தொகையை உரிய முறையில் கணக்கிட்டு, விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிதம்பரம்-புவனகிரி புறவழிச்சாலையில் சுமாா் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.