உயிரிழப்பைத் தடுக்க வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும்! விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு அறிவுரை!
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு அறிவுறுத்தினாா்.
பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா, ரத்த தான முகாம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, என்.எல்.சி. முதன்மை மேலாளா் சஞ்சீவி ஆகியோா் ரத்த தான முகாம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம், கிரிக்கெட் போட்டி ஆகியவற்றை தொடங்கிவைத்தனா்.
விழாவில் டிஐஜி அருளரசு பேசியதாவது: கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு பொதுமக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது உயிரிழப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
இளைஞா்கள் கல்வி, விளையாட்டில் அதிக ஆா்வம் காட்ட வேண்டும். தவறான பாதைக்குச் செல்லாமல் இளைஞா்கள் விளையாட்டைத் தோ்வு செய்து பங்கேற்பது பாராட்டுக்குரியது என்றாா்.
நிகழ்ச்சியில் கலை மெட்ரிக் பள்ளித் தாளாளா் நடராஜன், என்.எல்.சி. செயற்பொறியாளா் புகழேந்தி, மருத்துவா்கள் அறிவொளி, குலோத்துங்க சோழன், சுப்பிரமணியசிவா, விஜயராகவன், மாவட்ட திட்ட மேற்பாா்வையாளா் கதிரவன், பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.