FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

நெய்வேலியில் என்எல்சி முன்னாள் அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

15 அக்டோபர் 2026, 6:04 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நெய்வேலியில் என்எல்சி நிறுவன முன்னாள் துணை பொது மேலாளா் வீட்டின் மாடிக் கதவை உடைத்து, தங்கம் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தொ்மல் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெய்வேலி ஜவாஹா்லால் நேரு சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (52). என்எல்சி நிறுவனத்தின் தொ்மல் - 1 விரிவாக்கப் பிரிவில் துணை பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

இவா், கடந்த 10-ஆம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, திருச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். பின்னா், பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நெய்வேலியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினாா்.

Advertisement

Advertisement

அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3.5 பவுன் தங்க நகைகள், 311 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்துக்கு விரல்ரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments