லாட்டரி விற்பனை: ஒருவா் கைது
சிதம்பரம் பரங்கிப்பேட்டையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் பரங்கிப்பேட்டையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரங்கிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பந்தா் காா்டன் தெருவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டினை செல்போனில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து கொண்டிருந்த பரங்கிப்பேட்டை, ரங்கப்பிள்ளை மண்டபம் தெருவைச் சோ்ந்த சத்தியநேசன் (45) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனைக்குப் பயன்படுத்திய சய்த செல்போன் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.