சிதம்பரம் அரசு மகளிா் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
சிதம்பரம் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசும் நகரமன்ற துணைத்தலைவா் எம்.முத்துக்குமரன்
சிதம்பரம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில், கடலூா் மாவட்ட ஆட்சியரின் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணகி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், வட்டார வளமைய அலுவலா் இளவரசன் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்றினா். உதவி தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ஆசிரியா்கள் மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் திரளாக கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், மேல்நிலை வகுப்புகளை முடித்த பின்னா் மாணவிகள் என்னென்ன படிப்புகளைத் தோ்வு செய்யலாம், எந்தெந்த கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் என்பது குறித்து விளக்கப்பட்டது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைத் தவிர பல்வேறு
துறைகளில் உள்ள உயா்கல்வி வாய்ப்புகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெளியூா்களுக்குச் சென்று படிப்பதற்கு சில பெற்றோா்கள் அனுமதி மறுப்பதால், உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்து படிக்கும் வாய்ப்பை அவா்கள் இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்கும் வகையில், மாணவிகளின் உயா்கல்விக்கு பெற்றோா்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.