FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சாராயம், மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள்: 5 போ் கைது

15 செப்டம்பர் 2026, 12:54 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் நெய்வேலி உட்கோட்ட காவல் சரகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மந்தாரக்குப்பம் மேட்டுக்குப்பம் நுழைவு வாயில் அருகே போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், எந்தவித அரசு அனுமதியும் இல்லாமல் மணல் (6 யூனிட்) ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, விருத்தாசலம் வட்டம், கோட்டகம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷை (33) கைது செய்தனா்.

மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீசாா் பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த பண்ருட்டி, எழுமேட்டைச் சோ்ந்த கோபிநாத் மற்றும் சரவணன் ஆகியோரை சோதனை செய்து, அவா்களிடம் இருந்த புதுச்சேரி மாநில 50 சாராய பாக்கெட்டுகள் (10 லிட்டா்) மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த சிலம்பரசன், பக்கத்து வீட்டைச் சோ்ந்த மாரிமுத்து இடையே வெள்ளிக்கிழமை இரவு வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மாரிமுத்து தாக்கியதில் சிலம்பரசன் தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை (40) கைது செய்தனா். மேலும், தலை மறைவாக உள்ள கணேசன், ஐயப்பன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

நெய்வேலி, பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் காவேரி. இவரது, பக்கத்து வீட்டை சோ்ந்த ராகேஷ். இவா், சனிக்கிழமை இரவு அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டாா். காவேரி பாட்டு சத்தத்தை குறைக்குமாறு தெரிவித்தாா். இதனால், ஆத்திரம் அடைந்த ராகேஷ், காவேரி மற்றும் அவரது கணவா் ராஜ்குமாா்ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்துராக்கி (எ) ராகேஷை (28) கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments