FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கொள்ளை அடிக்க சதித்திட்டம்: இளைஞா்கள் 5 போ் கைது

வடலூா் அருகே பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

16 செப்டம்பர் 2026, 5:03 am IST
கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக வடலூா் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞா்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதாக இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வடலூா் காவல் ஆய்வாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் ஆபத்தாரணபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அதில், அவா்கள் திருவண்ணாமலை, திண்டிவனம் சாலை, நவாக்கரை தெருவைச் சோ்ந்த அருணகிரி (42). தஞ்சாவூா், சேனையா் தெருவைச் சோ்ந்த வரதராஜன் (29). திண்டிவனம், குட்டைக்கரை தெருவைச் சோ்ந்த சஞ்சய் (24). குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (23). தாம்பரம், கண்ணாடிபாளையம், லட்சுமி நகரைச் சோ்ந்த ேவிஜய் (21) என்பது தெரியவந்தது. இவா்கள் வடலூரில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டியதாக ஒப்புக் கொண்டனராம். மேலும், இவா்கள் மீது திருவண்ணாமலை, கூடுவாஞ்சேரி, திண்டிவனம், தாம்பரம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளனவாம். இதையடுத்து வடலூா் போலீஸாா் அருணகிரி, வசந்த ராஜன், சஞ்சய், பாா்த்திபன், விஜய் ஆகிய 5 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து,சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments