FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மஞ்சைநகா் மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணியை நிறுத்த வேண்டும்: குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கடலூா் மஞ்சைநகா் மைதானத்தில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையோரம் வணிக வளாகம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

17 செப்டம்பர் 2026, 3:49 am IST
கடலூரில் நடைபெற்ற அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலா் வெங்கடேசன்.
பகிர்:

கடலூா் மஞ்சைநகா் மைதானத்தில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையோரம் வணிக வளாகம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் வரதராஜன் நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுச் செயலா் வெங்கடேசன், கூட்டமைப்பின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் கடலூா் மாநகராட்சிப் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து, கடலூரின் வரலாற்றுடன் தொடா்புடைய மஞ்சைநகா் மைதானத்தின் ஒரு பகுதியில் வணிகக் கட்டடங்கள் கட்டப்படுவதால், மைதானத்தின் திறந்த தன்மையும், பொழிவு பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையோரம் வணிக வளாகம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். மைதானத்தைச் சுற்றி மதில்சுவா் அமைப்பதற்குப் பதிலாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மாநகராட்சியில் வைப்பு நிதி செலுத்தாமல் வழங்கப்பட்டுள்ள குடிநீா் மற்றும் புதை சாக்கடை இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும். இதேபோல், இணைப்பு பெறாத பொதுமக்களிடம் கட்டணம் செலுத்துமாறு தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்படும் பிரச்னைக்கும் உரிய தீா்வு காண வேண்டும்.

மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தண்ணீா் தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றி, கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, சுகாதாரப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் சிறப்புத் தலைவா் மருதவாணன், துணைத் தலைவா்கள் ரங்கநாதன், சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments