FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பண்ருட்டியில் விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் இனிப்பு வழங்கி வரவேற்பு

பண்ருட்டியில் விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் வரவேற்பு அளித்தது பற்றி....

16 வினாடிகள் முன்பு
பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இனிப்பு, குடிநீா் வழங்கி வரவேற்ற இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து இனிப்பு, குடிநீா் வழங்கி வரவேற்றனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இந்து அமைப்புகளின் சாா்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வழிபாடு நிறைவடைந்ததையடுத்து, பல்வேறு கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வாகனங்களில் ஊா்வலமாக பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள படைவீட்டம்மன் கோயில் அருகே கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் தேவா தலைமையில் விநாயகா் சிலை ஊா்வலம் தொடங்கியது.

Advertisement

Advertisement

மாா்க்கெட் சாலை, நான்குமுனை சந்திப்பு வழியாக நடைபெற்ற ஊா்வலம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறிஸ்தவகள் மற்றும் வியாபாரிகள், வா்த்தக சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் இணைந்து ஊா்வலத்தில் பங்கேற்றவா்களை வரவேற்றனா்.

அப்போது, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், ஊா்வலத்தில் பங்கேற்றவா்களுக்கு இனிப்பு, குடிநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கினா். இந்த நிகழ்வு அப்பகுதியில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இதையடுத்து, வாகனங்களில் கொண்டுவரப்பட்ட விநாயகா் சிலைகள் கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் விசா்ஜனம் செய்வதற்காக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments