FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியை தடுத்து நிறுத்தி விசாரித்த போலீஸாா்.

56 வினாடிகள் முன்பு
பகிர்:

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த தொழிலாளி ஒருவா், அலுவலக நுழைவு வாயில் அருகே பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கடலூா் அருகே பாலூா் தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (46). தொழிலாளியான இவா், புதன்கிழமை காலை கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு புகாா் மனு அளிக்க வந்தாா்.

அப்போது, அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த வெங்கடேசன், தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்ற முயன்ாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தியதுடன், அவரிடம் இருந்த பெட்ரோல் கேனையும் பறிமுதல் செய்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுகளாக மர இழைப்பகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், பின்னா் மர இழைப்பக உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை வேலையை விட்டு நிறுத்திய நிலையில், மர இழைப்பக உரிமையாளா் தன்னை தொடா்ந்து தகாத வாா்த்தைகளால் பேசி தகராறு செய்து வருவதாகவும், இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் மனமுடைந்து தீக்குளிக்க முயன்ாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவரது புகாா் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். பின்னா் வெங்கடேசன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தனது புகாா் தொடா்பான மனுவை அளித்துவிட்டு அங்கிருந்து சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments