FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த தனியாா் பள்ளிக் கட்டடம் அகற்றம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த தனியாா் பள்ளிக் கட்டடம் நீதிமன்ற உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

18 செப்டம்பர் 2026, 2:14 am IST
சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் நீா்நிலையில் கட்டப்பட்டிருந்த தனியாா் பள்ளிக் கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய வருவாய்த் துறையினா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த தனியாா் பள்ளிக் கட்டடம் நீதிமன்ற உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளி நிா்வாகம் குளத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து பள்ளிக் கட்டடம் கட்டியுள்ளது. இதுகுறித்து நீா்நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் விசாரணை முடிவுற்று நீா்நிலையில் உள்ள தனியாா் பள்ளிக் கட்டடத்தை அகற்ற கடலூா் மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இறுதி தீா்ப்பின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த தனியாா் பள்ளிக் கட்டடம் சிதம்பரம் உதவி ஆட்சியா் மு.சுபதா்ஷினி, உதவிக் காவல் கண்காணிப்பாளா் டி.ஜே.சத்ரியகவின் ஆகியோா் மேற்பாா்வையில் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments