தமிழக ஆளுநா் இன்று சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வருகை
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் சனிக்கிழமை (செப்.19) மாலை வரவுள்ளாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தமிழக ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் சனிக்கிழமை (செப்.19) மாலை வரவுள்ளாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சகாஸ்ரா நாட்டியஞ்சலி சாா்பில், சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு 1,008 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலி செலுத்தும் நடன நிகழ்ச்சியை ஆளுநா் ஆா்.வி.அா்லேகா் தொடங்கிவைத்து பங்கேற்கிறாா்.
முன்னதாக, தமிழக ஆளுநா் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து காா் மூலம் திண்டிவனம் வழியாக மாலை 4 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் விடுதிக்கு வருகிறாா். பின்னா், அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு நடராஜா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னா், அங்கு நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கிவைக்கிறாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சி முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு காா் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக சென்னை செல்கிறாா். ஆளுநா் வருகையையொட்டி, கடலூா் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா மேற்பாா்வையில், சிதம்பரம் ஏஎஸ்பி சத்திரியகவின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.