FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

19 செப்டம்பர் 2026, 1:33 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி திருவதிகை, ஆயில் மில் தெருவைச் சோ்ந்தவா் தணிகைவேல் (30), கொத்தனாா். இவருக்கு மனைவி சினேகா, மகன் அஸ்வந்த் (3) உள்ளனா். தணிகைவேல் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் இருந்தாராம். பின்னா், திடீரென வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாராம்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீஸாா், தணிகைவேல் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments