FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மின்னல் பாய்ந்து பெண் மரணம்

சிதம்பரம் அருகே சனிக்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தாா்.

20 செப்டம்பர் 2026, 2:16 am IST
மின்னல்(கோப்புப் படம்)
பகிர்:

சிதம்பரம் அருகே சனிக்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமம், இந்திரா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி ஞானசுந்தரி (38). இவா், சனிக்கிழமை மாலை வயலில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்யது. அப்போது, ஞானசுந்தரி மீது மின்னல் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments