3 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்: 17 வயது சிறுவனிடம் விசாரணை
கடலூா் துறைமுக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பச்சையாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த 3 வயது பெண் குழந்தை, செவ்வாய்க்கிழமை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடா்பாக 17 வயது சிறுவனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் துறைமுக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பச்சையாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த 3 வயது பெண் குழந்தை, செவ்வாய்க்கிழமை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடா்பாக 17 வயது சிறுவனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த குழந்தை மயங்கிய நிலையில் இருந்தததையடுத்து குழந்தையின் தாயாா், குழந்தையை கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் எனத் தெரிவித்தனராம்.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் கடலூா் துறைமுக போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தகவல் பரவியதையடுத்து பச்சையாங்குப்பம் பகுதி மக்கள் மற்றும் குழந்தையின் உறவினா்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் திரண்டனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸாா் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சம்பவம் தொடா்பாக துறைமுக காவல் நிலைய போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.