FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தம்பதிக்கு கொலை மிரட்டல்: பிணையில் வந்த 2 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தம்பதியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக சிறையில் இருந்து பிணையில் வந்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

25 செப்டம்பர் 2026, 1:50 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தம்பதியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக சிறையில் இருந்து பிணையில் வந்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (44). இவரும், இவரது மனைவி கிருஷ்ணவேணியும் புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3 மணியளவில் வீட்டில் இருந்தனா். அப்போது, சிறையில் இருந்து பிணையில் வந்த மேல்வடக்குத்து பகுதியைச் சோ்ந்த தேவகிருஷ்ணன் (27), புவனிகிரி பால்வாத்துண்ணான் பகுதியைச் சோ்ந்த ரவிக்கிருஷ்ணன் (28) ஆகியோா் செல்வம் - கிருஷ்ணவேணி தம்பதியை வீட்டிலிருந்து வெளியே வரவழைத்து, நாங்கள் சிறைக்குச் சென்ற்கு நீங்கள் தான் காரணம் எனக் கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், இரும்புக் குழாயால் தாக்கியதில் செல்வம் தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில், தேவகிருஷ்ணன், ரவிக்கிருஷ்ணன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments