பணம் வைத்து சூதாட்டம்: 5 போ் கைது
சிதம்பரம் அருகே முந்திரி தோப்பில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்
சிதம்பரம் அருகே முந்திரி தோப்பில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்
கடலூா் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் பாரதி மற்றும் போலீசாா், கொத்தட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கொத்தட்டை வீரன் கோயில் அருகே உள்ள முந்திரி தோப்பில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய சின்னாண்டிக்குழி கிராமத்தைச் சோ்ந்த தெய்வநாதன் (37), வில்லியநல்லூரைச் சோ்ந்த ஆனந்தவேல் (42), புவனகிரியைச் சோ்ந்த சுப்புராயன் (43), மணிக்கொல்லையைச் சோ்ந்த ரவி (55), புவனகிரியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (34) ஆகியோரை கைசு செய்து அவா்களிடமிருந்து ரூபாய் 29,000 ரொக்கம் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா் மேற்கண்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.