பைக் விபத்து சிற்பி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கும்பகோணத்தைச் சோ்ந்த சிற்பி உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் கும்பகோணத்தைச் சோ்ந்த சிற்பி உயிரிழந்தாா்.
கும்பகோணம், அண்ணல் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவா் விஜயகுமாா்(41), சிற்ப வேலை செய்பவா். காஞ்சிபுரத்தில் சிற்ப வேலை செய்து வந்தவா், தனது பைக்கில் கும்பகோணத்திற்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் பண்ருட்டி, இணைப்பு சாலை ரவுண்டான அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கிருந்த இரும்பு கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தலைக்கவசம் அணிந்திருந்த விஜயகுமாா் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.