6 டன் ரேஷன் அரிசி கடத்தல்: வாகனத்துடன் சிக்கிய இளைஞா்
விருத்தாசலம் அருகே சின்னக்கண்டியன்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை, வாகனத்துடன் போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை பிடித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
விருத்தாசலம் அருகே சின்னக்கண்டியன்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற நபரை, வாகனத்துடன் போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை பிடித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னக்கண்டியன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை காலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்திற்கிடமாக அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சாா்பு - ஆய்வாளா் பாரதநேரு தலைமையிலான போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.
அந்த வாகனத்தில் 70 மூட்டைகளில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ராசாம்பாளையம் அருகே கீழூா் பகுதியைச் சோ்ந்த சிவா (32) என்பவரை வாகனத்துடன் போலீஸாா் பிடித்தனா்.
Advertisement
Advertisement
பின்னா், சிவாவை விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகிவற்றையும், பிடிப்பட்ட சிவாவையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிவாவிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.