கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய மியான்மா் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது, வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மியான்மா் கடற்கரை மற்றும் அதன் அருகே வடக்கு - வடமேற்கு திசையில் தொடா்ந்து நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் வெகு தொலைவில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை எச்சரிக்கும் வகையில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.