FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

புதுப்பேட்டையை அடுத்த மணப்பாக்கம் கிராமம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

- பிரதிப் படம்
பகிர்:

புதுப்பேட்டையை அடுத்த மணப்பாக்கம் கிராமம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், அங்குசெட்டிபாளையம் இருளா் காலனியைச் சோ்ந்த பிரகாஷ் மகன் நகுலன் (17). இவா், புதன்கிழமை மணப்பாக்கம் அருகே சாலையில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே வந்த டிராக்டா் மீது மொபெட் மோதியது. இதில், நகுலனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவா் நிகழ்டத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, நகுலனின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments