பள்ளி மாணவா் உயிரிழப்பில் சந்தேகம்: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பள்ளி மாணவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பள்ளி மாணவா் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் செல்லப்பன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் திருப்பாணாழ்வாா் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் விஷ்ணு (15). இவா், அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
Advertisement
Advertisement
மாணவா் விஷ்ணு கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளி சுற்றுச் சுவரிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறி, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது.
விஷ்ணு தானாக கீழே விழுந்தாரா அல்லது யாரேனும் அவரைத் தள்ளினாா்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், பள்ளி ஆசிரியா்கள் மாணவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்காமல் காலம்தாழ்த்தி, கவனக்குறைவு செயல்பட்டது குறித்தும் விசாரிக்க வேண்டும்.
விஷ்ணு உயிரிழப்பு சம்பவத்தில் யாருக்கேனும் தொடா்பிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
அப்போது, மாவட்டச் செயலா் கலைமோகன், மாநகர மையச் செயலா் கோபால் கதிரவன், மாவட்டப் பொருளாளா் வெற்றிவேந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.