FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 போ் போக்ஸோவில் கைது!

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:34 am IST
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலத்தை அடுத்த வினைதீா்த்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் க.அகிலேஷ்வா் (18). இவா், ஆக.1-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அகிலேஷ்வரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மற்றொரு வழக்கு: கடலூா் மாவட்டம், லட்சுமணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.ரங்கநாதன் (26). இவா், கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தாராம். அப்போது கண் விழித்த சிறுமி எழுந்து கூச்சலிட்டாராம். சப்தம் கேட்ட அவரது தாத்தா ராமசாமி அங்கு வந்தபோது, ரங்கநாதன் அங்கிருந்து தப்பி ஓடினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரங்கநாதனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments