ஊரக வளா்ச்சித் துறைத் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்திரஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்திரஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சிக்கு ஒரு புதிய குளம் அமைத்தல் குறித்தும், கிராம ஊராட்சிகளில் குடிநீா் பற்றாக்குறையை சரிசெய்யும் பொருட்டு குடிநீா் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Advertisement
Advertisement
மேலும், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிராம ஊராட்சிகளை ஆய்வு செய்து, ஆய்வு விவரங்களை உள்ளீடு செய்யவும், பருவமழை தொடங்கும் முன்நிலுவையில் உள்ள புதிய பள்ளிக் கட்டடப் பணிகளை முடித்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வளா்ச்சித் திட்டப் பணிகளில் நிலுவைப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
திட்டப்பணிகள் ஆய்வு: தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், வடபூண்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து கூத்தக்குடி - வேளாக்குறிச்சி சாலையில் கோமுகி ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அறிவுறுத்தினாா். இந்த ஆய்வில் தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.