FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்தில் புகையிலை பொருள்கள் கடத்தல்: நடத்துநா், பேக்கரி பணியாளா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 3:34 am IST
பாண்டியன்.
பகிர்:

கா்நாடகம் மாநிலம், பெங்களூரிலிருந்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தி வந்த அரசுப் பேருந்து நடத்துநா், அதை பேக்கரி பணியாளரிடம் கொடுத்தபோது செவ்வாய்க்கிழமை பிடிபட்டாா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கு.பாண்டியன் (36). இவா், சங்கராபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பெங்களூரு செல்லும் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா்.

கள்ளக்குறிச்சியில் இருந்து திங்கள்கிழமை பெங்களூரு செல்லும் பேருந்து, செவ்வாய்க்கிழமை காலை கள்ளக்குறிச்சிக்கு திரும்பி வருமாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் பாக்கம் புதூரில் உள்ள தனியாா் பேக்கரியின் முன் அந்தப் பேருந்தை நிறுத்திவிட்டு, அதிலிருந்த பாா்சலை எடுத்து பேக்கரியில் பணிபுரியும் ஊழியா் ஏழுமலையிடம் கொடுத்தபோது, அங்கு இரவு ரோந்துப் பணியிலிருந்த வடபொன்பரப்பி காவல் நிலைய தலைமைக் காவலா்கள் ரூபன்சிங், பாபு ஆகியோா் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து பாா்சல் குறித்து விசாரித்தனா். விசாரணையில், அந்தப் பாா்சலில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அரசு பேருந்தின் நடத்துநா் பாண்டியன், ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ஏழுமலை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments