கள்ளக்குறிச்சி பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கூறியதாவது:
கள்ளக்குறிச்சி வட்டாரத்திலுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நெல், உயிரி உரங்கள், நுண்ணுரம், தக்கை பூண்டு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்ற இடுபொருள்கள் தரமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் சுமாா் ரூ.1.95 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய விதை சுத்திகரிப்பு இயந்திரத்துடன் கூடிய விதை சேமிப்புக் கிடங்கில் விவசாயிகளின் விதைப்பண்ணை வயலில் இருந்து வரப்பெற்ற வயல்மட்ட விதைகள், சுத்திகரிக்கப்பட்டு வல்லுனா் விதைகள் மற்றும் சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது கேட்டறியப்பட்டது. அங்கு சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, வரகு போன்ற வயல் மட்ட விதைகளும் சுத்திகரிப்பு செய்யும் முறைகளும் ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத்தொடா்ந்து, கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.9.09 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தினசரிச் சந்தை வணிக வளாக கட்டடக் கட்டுமானப் பணிகளை நேரில் பாா்வையிட்டு, கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனையடுத்து நிறைமதி கிராமத்தில் விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் ஊற்றும் பணிகளை பாா்வையிட்டு, சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ரு.ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் த.கொளஞ்சிவேல், ஜோசப் ஆனந்தராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நா.ஜோதிபாசு, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.