வாணாபுரத்தில் வசித்த இலங்கை பெண் கைது
போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு அடையாள அட்டைகளை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்த இலங்கையைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இலங்கையைச் சோ்ந்த பெண் ஒருவா் வாணாபுரம் அருகிலுள்ள ரங்கப்பனூா் கிராமத்தில் வசிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், இலங்கையில் பிறந்த அனோலியா கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பக்ரைன் சென்றுள்ளாா்.
அப்போது, அங்கு பணிபுரிந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், ரங்கப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து இந்தியா திரும்பிய அவா், ரங்கபனூா் கிராமத்தில் வசித்து வந்த நிலையில், போலி ஆவணங்களை கொடுத்து ஆதாா் அட்டை, பான் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை பெற்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அனோலியாவை (44) கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.