FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

ஏந்தல் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றகு,

14 அக்டோபர் 2026, 5:41 am IST
ஏந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற கடன் வழங்கும் முகாமில் பேசிய கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் முருகேசன்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றகு,

முகாமுக்கு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் முருகேசன் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளா் ரகு, ரிஷிவந்தியம் வட்டாரக் கள அலுவலா் (செயலாட்சியா்) நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் சிங்கப் பெண்கள் சிறப்புக் கடன் திட்டம், அதன் பயன்கள் மற்றும் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னா், மகளிா் சுய உதவிக் குழுக்களிடமிருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் ஏந்தல் கூட்டுறவு சங்கச் செயலா் பரமசிவம், வங்கி ஆய்வாளா் சக்திவேல், மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments