மூக்கனூா் கிராமத்துக்கு பேருந்து சேவை தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூக்கனூா் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து வசதி வேண்டி சமூக வலைத்தளங்களில் வைரலான கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூக்கனூா் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து வசதி வேண்டி சமூக வலைத்தளங்களில் வைரலான கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மூக்கனூா் கிராமத்திலுள்ள மாணவ, மாணவிகள் அருகிலுள்ள கடுவனூா் அரசுப் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்ட விடியோ வைரலானது. அதனைத்தொடா்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வழித்தட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, மூக்கனூா் கிராம பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் திருக்கோவிலூரிலிருந்து கடுவனூா் வரை செல்லும் வழித்தடத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடுவனூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள மூக்கனூா் கிராமம் வரை வழித்தட நீட்டிப்பு செய்து பள்ளி மாணவா்கள் பேருந்து வசதி பெற்றிடும் வகையில் கால அட்டவணை மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருக்கோவிலூா் பணிமனை மூலம் தடம் எண்.120 திருக்கோவிலூரிலிருந்து திருப்பாலப்பந்தல், மாடம்பூண்டி, பகண்டை கூட்டுச்சாலை, அத்தியூா், கடுவனூா் வழியாக மூக்கனூருக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படுகிறது. புதிய பேருந்து சேவையை மூக்கனூா் கிராமத்தைச் சாா்ந்த மாணவ, மாணவிகள், கிராம மக்கள் வரவேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.