FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் காயம்

கல்வராயன்மலை அருகே வீட்டு மின் இணைப்புக்கான மின் பிரச்னையை சரிசெய்ய மின்கம்பத்தில் ஏறிய இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.

39 வினாடிகள் முன்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே வீட்டு மின் இணைப்புக்கான மின் பிரச்னையை சரிசெய்ய மின்கம்பத்தில் ஏறிய இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.

கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தாழ்கொண்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் க.சத்தியராஜ் (26). இவா், வெள்ளிக்கிழமை கொட்டபுத்தூா் கிராமத்தில் சீனிவாசன் என்பவரது வீட்டில் மின் பிரச்னையை சரி செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறினாராம்.

அப்போது மேலே சென்ற உயா் அழுத்த மின் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments