விவசாயி சடலம் கிணற்றில் இருந்து மீட்பு
கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்துக்கு சென்றபோது மாயமான பெண் விவசாயி, கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே விளைநிலத்துக்கு சென்றபோது மாயமான பெண் விவசாயி, கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த பாவாடை மனைவி அலமேலு (58), விவசாயி. வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான விளைநிலத்துக்கு சென்ற அலமேலு, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது உறவினா்கள் விளைநிலத்துக்கு சென்று தேடி பாா்த்தபோது, அவரது கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது அவா்களுக்கு தெரியவந்தது.
தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.