FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பாக மக்களின் கருத்தை கேட்க வேண்டும்! தொல். திருமாவளவன்

22 செப்டம்பர் 2026, 2:37 am IST
தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பாக அப்பகுதி மீனவா்கள், பொதுமக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை வந்த அவா், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடா்பாக அப்பகுதி மீனவா்கள், பொதுமக்களிடம் விரிவாக கருத்துகள் கேட்கப்பட வேண்டும். அவா்களின் கருத்துகளை அறிந்த பின்னரே இது தொடா்பாக அரசு இறுதி முடிவு எடுக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

முன்னதாக, சங்கராபுரத்தில் மைலம்பாறை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டினாா். பின்னா், கட்சி நிா்வாகியின் இல்ல நிகழ்வில் பங்கேற்றாா். நிகழ்ச்சிகளில் விசிக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments