FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

23 செப்டம்பர் 2026, 4:09 am IST
மேல்நாரியப்பனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கூறியதாவது: ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவா்களுக்காக ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமூக நீதி மாணவா் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன. இங்கு கல்லூரி மாணவா்கள் தங்கி படிப்பதற்காக 25 அறைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப் பணிகளை விரைவாக முடித்து, மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாவந்தூா் கிராமம் வழியாக ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையை இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தொடா்ந்து சின்னசேலம் ஒன்றியம், அம்மையகரம் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியும், அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சமையலறைக் கட்டடப் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

பூண்டி கிராமத்தில் ரூ.19.71 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியும், வாசுதேவனூா் கிராமத்தில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, மேல்நாரியப்பனூா் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பாா்வையிட்டு, அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், குடிநீா் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments