ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ சகோதரி வீட்டில் திருடியவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவின் சகோதரி வீட்டில் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் தாய் நகரில் வசித்து வருபவா் அருண்குமாா் மனைவி பனிமலா் (48). இவா் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் உள்ள அவரது சகோதரா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ வீட்டுக்கு சென்றாா். அப்போது பனிமலரின் வீட்டில் திருட்டுப்போனது.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபரைத் தேடிவந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை வடதொரசலூா் கேட் அருகே தியாகதுருகம் காவல் ஆய்வாளா் பு.மாணிக்கராஜா மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறவே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
விசாரணையில் அவா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், வரட்டனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோ.வேலன் (34) என்பதும், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் தாய் நகரில் எம்எல்ஏவின் சகோதரி வீட்டில் திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வேலனைக் கைது செய்து,
கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.