என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் ரெட்டியார்பாளையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் ரெட்டியார்பாளையத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.
புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் எல்லைப்பிள்ளைச் சாவடியில் செயல்பட்டு வந்த அந்தக் கட்சித் தலைமை அலுவலகம், ரெட்டியார்பாளையம் ஜவகர் நகர் அருகே பொன்நகர் முதன்மை பிரதான சாலைக்கு மாற்றப்பட்டது. அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் நிறுவனர் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, கட்சிக் கொடியையும் அவர் ஏற்றினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலர் பாலன்,
எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்த், சுகுமார், கோபிகா, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், முன்னாள் வாரியத் தலைவர்கள் லூயி கண்ணையா,
பாலமுருகன், சிவகந்தன், பக்தவச்சலம், ரேவதி பற்குணன், சுந்தரி, ஞானசேகரன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.