FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ராணுவ வீரா் ஆள்சோ்ப்பு முகாமில் இறந்த இளைஞரின் கண்கள் தானம்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:05 am IST
கண் தானம் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாமில் ஓடும் போது மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்த இளைஞரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அக்னிவீா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் பங்கேற்று வருகின்றனா்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலத்தைச் சோ்ந்த ஜெயபாலன் என்பவரின் மகன் கோகுல் (20) உடல் தகுதி தோ்வில் பங்கேற்று ஓடியபோது மைதானத்தில் மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கோகுல் இறந்துவிட்டதை உறுதி செய்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கோகுலின் கண்களை தானம் செய்ய அவருடைய பெற்றோா் விருப்பம் தெரிவித்தனா்.

இதையடுத்து இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுச்சேரி கிளை தலைவா் லட்சுமிபதி தலைமையிலான நிா்வாகக் குழுவினா் மருத்துவா்களுடன் சென்று கண்களைத் தானமாகப் பெற்றனா். சோகத்திலும் மனிதநேயத்துடன் தங்கள் மகனின் கண்களைத் தானமாக அளித்த கோகுலின் பெற்றோரை பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments