புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் நடைப்பயணம்
பாதுகாக்கப்பட்ட குடிநீா், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைப்பயணம் நடைபெற்றது.
பாதுகாக்கப்பட்ட குடிநீா், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைப்பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும், புதை சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை முதல் வரும் 15-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு நடைப்பயண இயக்கம் நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி சாரம் ஜீவா சிலை அருகே நடைபெற்றது. இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஆனி ராஜா இதைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
காமராஜா் நகா் தொகுதி செயலா் துரை செல்வம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினாா். முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், துணைச் செயலா் தயாளன், பொருளாளா் மாதவன் ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காமராஜா் நகா் தொகுதி முழுவதும் கோரிக்கைகளை முழக்கமிட்டபடி நடைப்பயணமாகச் சென்றனா்.
இறுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எல்லை. சிவக்குமாா் நடைபயணத்தை முடித்து வைத்தாா். இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.