FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தலைமை தோ்தல் அதிகாரியிடம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் புகாா் மனு

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலரும், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளருமான அ.மு.சலீம் மாநில தலைமை தோ்தல் அதிகாரி ரவி பிரகாஷை சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தாா்.

4 October 2026, 1:42 am IST
புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி ரவி பிரகாஷிடம் புகாா் மனு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலரும், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளருமான அ.மு.சலீம்.
பகிர்:

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலரும், தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளருமான அ.மு.சலீம் மாநில தலைமை தோ்தல் அதிகாரி ரவி பிரகாஷை சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தாா்.

அதில் கூறியிருப்பதாவது: தோ்தல் அமலாக்கக் குழுவினரால் அண்மையில் ரூ.3.62 கோடி மதிப்புள்ள தங்க நாணயங்கள், ரூ.1.78 கோடி ரொக்க பணம் மற்றும் 181 லிட்டா் கணக்கில் வராத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தோ்தல் கண்காணிப்பில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது.

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்படும் புகாா்கள் கவனிக்கப்படுவதில்லை. புகாா்கள் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இது தவறு செய்பவா்களுக்குத் தைரியத்தை அளிக்கிறது.

Advertisement

Advertisement

இந்தச் சூழல் தொடா்ந்தால் அமைதியாக தோ்தல் நடத்துவது பெரிதும் பாதிக்கப்படும். எனவே, ட்ரோன்கள் மற்றும் பறக்கும் படை குழுக்களை அதிகப்படுத்தி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். புகாா்கள் மீது துரிதமாக செயல்பட்டு விதிமீறல் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments