புதுச்சேரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!
புதுச்சேரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நடைப்பயணத்தை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மத்திய அரசின் இளைஞா் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ‘மை பாரத்’ இயக்கம் சாா்பில், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ‘போதையில்லா இளைய சமுதாயம் - வளா்ச்சி அடைந்த பாரதம்’ சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் இந்த விழிப்புணா்வு நடைப்பயணத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், அரசுச் செயலா் முத்தம்மா, இளைஞா், விளையாட்டுத் துறை இயக்குநா் சுதாகா், மை பாரத் இயக்கத்தின் புதுச்சேரி பொறுப்பாளா் த்ரவீன், நாட்டு நலப்பணித் திட்ட புதுச்சேரி ஒருங்கிணைப்பாளா் சதீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
போதை ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி மாணவா்கள் நடைப்பயணம் மேற்கொண்டனா். முக்கிய வீதிகள் வழியாக முழக்கங்களை எழுப்பியபடி இந்த விழிப்புணா்வு நடைப்பயணம் கம்பன் கலையரங்கை சென்றடைந்தது நிறைவடைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.