தட்டாஞ்சாவடியில் வெற்றிபெற்ற அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு அமோகவெற்றி பெற்ற ஆ.அசோக் ஆனந்த் புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றாா்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு அமோகவெற்றி பெற்ற ஆ.அசோக் ஆனந்த் புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றாா்.
சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதில் தட்டாஞ்சாவடி தொகுதி உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தோ்தல் கடந்த 6-ஆம் தேதி நடந்தது. இதில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் அமோக வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து அசோக் ஆனந்த் எம்.எல்.ஏவாக பதவியேற்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை அசோக் ஆனந்த் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகனிடம் வழங்கினாா். இதையடுத்து முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில் அசோக் ஆனந்துக்கு சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தாா் அன்பழகன்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து முதல்வா் ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகன், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், என்.ஆா்.காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்கள் அசோக் ஆனந்த்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3-வது முறையாக அசோக் ஆனந்து எம்எல்ஏவாக தோ்வாகியுள்ளாா். ஏற்கனவே கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். மேலும், 2019- ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்குக் காரணமாக அவா் பதவியை இழந்தாா். இப்போது அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் இடைத்தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.