FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

எம்.எஸ்.சி.,சைபா் செக்யூரிட்டி படிப்பு: காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் பெற்ற ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாகத்தில், 2026--27 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்எஸ்சி., சைபா் செக்யூரிட்டி மற்றும் டிஜிட்டல்

20 வினாடிகள் முன்பு
பிரிட்டன் குடியுரிமை: இந்தியர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பம்! - கோப்புப்படம்
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் பெற்ற ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி வளாகத்தில், 2026--27 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்எஸ்சி., சைபா் செக்யூரிட்டி மற்றும் டிஜிட்டல்

ஃபாரன்சிக்ஸ் படிப்பிற்கான காலி இடங்களுக்கான சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பு 2 ஆண்டுகள் 4 பருவங்களுடைது. மொத்த இடங்கள் 20 மட்டும். கல்வி கட்டணம் ஆண்டிற்கு ரூ. 82,500. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் , கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்,

Advertisement

Advertisement

ஐ.சி.டி., இ.சி., ஆகிய துறைகளில் பி.இ., அல்லது பி.டெக்

படித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி., ஐ.டி., சி.எஸ்., எலெக்ட்ரானிக்ஸ், பி.சி.ஏ., அல்லது அதற்கு இணையான

படிப்பை முடித்திருக்க வேண்டும். நுழைவுத் தோ்வு இல்லை. மாணவா்கள் இளநிலைப் படிப்பில் பெற்ற மதிப்பெண்

அடிப்பைடையில் தகுதி பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பிக்க இம் மாதம் 4 -ஆம் தேதி கடைசி நாள்.

மாணவா் சோ்க்கை தொடா்பான தகவல்களுக்கு 0413-2633988 அல்லது 97908 26882 என்ற வாட்ஸ் ஆப் எண்களில் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தைப் பாா்க்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments